அனைத்து அவசர சேவைகளுக்கும் ஒரே உதவி அழைப்பு எண் 112 அறிமுகம்

  ஸ்ரீதர்   | Last Modified : 19 Feb, 2019 03:25 pm
112-india-s-all-in-one-emergency-helpline-number-to-be-launched-today

அனைத்து அவசர சேவைகளுக்கும் ஒரே உதவி அழைப்பு எண்ணாக 112 என்ற எண், தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

காவல் துறையை அழைக்க 100, தீயணைப்புத்துறைக்கு 101, சுகாதாரத்துறைக்கு 108, பெண்கள் பாதுகாப்புக்கு 1090 என்பன உட்பட பல்வேறு சேவைகளுக்கு பல்வேறு உதவி அழைப்பு எண்கள் உள்ளன.

இந்நிலையில், அனைத்து அவசர சேவைகளுக்கும் ஒரே உதவி அழைப்பு எண்ணாக 112 என்ற எண், ஏற்கனவே ஹிமாச்சலப் பிரதேசம், நாகாலாந்தில் வழக்கத்தில் உள்ள நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும், மும்பையிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.


மேலும், 112 இந்தியா என்ற மொபைல் செயலியையும் உள்துறை அமைச்சகம் கூகுள் ப்ளே ஸ்டோரிலும், ஆப்பிள் ஸ்டோரிலும் அறிமுகப்படுத்துகிறது.

இந்த செயலியில் ஆபத்துக்குள்ளாகும் பெண்கள், அருகாமையில் உள்ள பதிவு பெற்ற தன்னார்வலர்களை உதவிக்கு அழைக்கும் வகையில், அபாய ஒலி எழுப்பும் வசதியும் இடம் பெற்றுள்ளது. 112 ஹெல்ப் லைனின் பதற்ற கால அவசர அழைப்பு வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது. 

newstm.in


 ​

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close