பதட்டமான சூழ்நிலையில், சவுதி இளவரசர் சல்மான், பாகிஸ்தான் சுற்றுபயணத்தை முடித்துக்கொண்டு, இந்தியாவிற்கு வந்திறங்கினார். வழக்கத்திற்கு மாறாக, பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலையத்திற்கு சென்று அவரை வரவேற்றார்.
இதுவரை 9 நாடுகளின் தலைவர்களை மட்டுமே, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று விமான நிலையத்தில் வரவேற்றுள்ளார். மேலும், தனது ட்விட்டர் கணக்கில் பிரதமர் மோடி, "சவுதி இளவரசர் சல்மானை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்" என எழுதி இருந்தார்.
சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இளவரசர் சல்மான், "ஐநா தீவிரவாத பட்டியலை அரசியலாக்க வேண்டாம்" என கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
newstm.in