பெங்களூர்- ஏரோ இந்தியா 2019 நிகழ்ச்சி தொடங்கியது

  ஸ்ரீதர்   | Last Modified : 20 Feb, 2019 12:39 pm
aero-india-2019-spectacular-air-show-begins-in-bengaluru-today

ஏரோ இந்தியா 2019 தொடக்க நிகழ்ச்சியில், விமானப்படையின் விமானங்கள் வானில் வர்ணஜாலம் நிகழ்த்தி சாகசங்களில் ஈடுபட்டன. 

ஏரோ இந்தியா 2019 நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இதில் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் டசால்ட் ஏவியேஷன் தயாரிப்பான ரஃபேல் விமானங்கள் இடம் பெற்றுள்ளன. பல்வேறு நாடுகளின் தயாரிப்பு விமானங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஏரோ இந்தியா 2019 நிகழ்ச்சியை ஒட்டி, நேற்று, சாகச பயிற்சியில் ஈடுப்பட்டு இருந்த போது இரு போர் விமானங்கள் மோதி, விபத்துக்குள்ளானது. இதில்ஒரு விமானி உயிரிழந்த நிலையில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். நேற்றைய விபத்தில் உயிரிழந்த வீரருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு கண்காட்சியை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர், விண்வெளி மற்றும் இதர துறைகளில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்களுக்கு பெரிய வாய்ப்புகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், 2 ஆயிரத்து 300 புதிய விமானங்களை இந்தியா வாங்க உள்ளது என்றும் இந்தியாவில் உற்பத்தி இலக்குகளை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் அதே நேரம், அவை சுற்றுச்சூழலை பாதுகாப்பதாகவும் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

பெருமைமிக்க அதிநவீன தேஜஸ் விமானத்தை நாட்டிற்கு அர்ப்பணித்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு இந்நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஏரோ இந்தியா ஷோ - பெங்களூருவின் பெருமைகளில் ஒன்றாக  ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close