டெல்லி- ஐதராபாத் நிஜாம் குடும்ப வைர நகைகள் கண்காட்சி

  ஸ்ரீதர்   | Last Modified : 20 Feb, 2019 12:50 pm
rare-collection-of-hyderabad-nizams-jewels-on-display-at-national-museum

டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் ஐதராபாத் நிஜாம்களின் வைர நகைகள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

ஐதராபாத் நிஜாம் குடும்பத்துக்குச் சொந்தமாக இருந்த உலகின் புகழ்பெற்ற வைர நகைகள் டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டன. கடந்த 1995ம் ஆண்டு இந்த வைர நகைகளை நிஜாம் ஜூவல்லரி டிரஸ்டிடம் இருந்து இந்திய அரசு 218 கோடிக்கு ரூபாய்க்கு வாங்கியதாகும்.

இந்த ஜகோப் வைர நகைகள் 184.75 காரட் எடை கொண்ட 173 கற்கள் பதிக்கப்பட்டு கண்களைக் கவரும் வகையில் உள்ளன. பொது மக்களிடையே நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தினை பறைசாற்றும் வகையில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.

இதில் அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகை , கழுத்தணிகள், பெல்ட்கள் மற்றும் கலன்கள், வளையல்கள், காதணிகள், கவசங்கள், கால் வளையங்கள், விரல் மோதிரங்கள்,  வாட்ச் சங்கிலிகள், கைவளையல்கள், பொத்தான்கள் ஆகியவை இடம்பெற்றன. இந்த கண்காட்சி மே 5 வரை  மட்டும் இக்கண்காட்சி நடத்தப்படும்.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close