புல்வாமா தாக்குதலுக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம்!

  Newstm Desk   | Last Modified : 20 Feb, 2019 12:57 pm
un-human-rights-chief-strongly-condemns-pulwama-terror-attack

ஜம்மு - காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் மத்திய பாதுகாப்புப் படையினர் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து  ஐ.நா மனித உரிமைகள் ஆணையம், அதன் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. 

புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14 தேதி, பாகிஸ்தானைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினர், இந்திய பாதுகாப்புப்படையினர் சென்ற வாகனத்தின் மீது நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 38 பேர் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தானை மையமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கத்தைச் சேர்ந்த ஆதில் அஹமது என்பவன் திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளான் என என்.ஐ.ஏ தகவல் தெரிவித்திருந்தது. மேலும், இது தொடர்பாக என்.ஐ.ஏ தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு நடத்திய இந்த கொடூர தாக்குதலுக்கு ஐ.நா.சபை மற்றும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

இதைத்தொடர்ந்து, இந்த தாக்குதலை குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையமும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. 

மேலும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் அதிகாரி மிச்செல்லே  பேச்சலேட் கூறுகையில், 'காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் இந்த தாக்குதலுக்கு மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. தீவிரவாதிகளின் இந்த தாக்குதல் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மிச்செல்லே  பேச்சலேட் தெரிவித்துள்ளார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close