ஷாப்பிங் மாலில் சிறுத்தை: பொதுமக்கள் பீதி

  Newstm Desk   | Last Modified : 20 Feb, 2019 01:59 pm
panic-after-panther-seen-at-shopping-mall

மஹாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில், சிறுத்தை சுற்றித் திரியும் காட்சி, அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவானதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். 

மஹாராஷ்டிரா மாநிலம் தானே நகரின் சமதா நகரில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில், வாடிக்கையாளர்களின் வருகை, குடோனில் உள்ள இருப்புகள் மற்றும் வாகன நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் நடக்கும் நிகழ்வுகள், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், அந்த மாலின் ஒரு பகுதியில், சிறுத்தை ஒன்று சுற்றித் திரிந்தது, மால் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே இது குறித்து, வனத்துறையினருக்கு தகவல் தரப்பட்டது. 

விரைந்து வந்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள், வனத்துறையினர், சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அதற்குள் சிறுத்தை அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்று விட்டது. அதையடுத்து அங்கிருந்து கேமரா கட்டுப்பாட்டு அறையில் பதிவாகியிருந்ததை சோதித்தபோது, அந்த சிறுத்தை, மாலின் கீழ் தளத்தில் சுற்றித் திரியும் காட்சி பதிவாகியிருந்தது.

ஆனால், அங்கும் சிறுத்தை நேரடியாக தென்படாதாதால், அங்குள்ள ஏதேனும் ஒரு இடத்தில் சிறுத்தை பதுங்கியிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். அதை பிடிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இதனால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், மற்றும் அந்த மாலில் பணியாற்றுவோர் மற்றும் அக்கம் பக்கம் வந்து செல்வோர் பீதியடைந்துள்ளனர். 

 newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close