தீவிரவாதத்தை வேரறுக்க இந்தியாவுக்கு துணையாக நிற்போம்: சவுதி இளவரசர் உறுதி!

  Newstm Desk   | Last Modified : 20 Feb, 2019 04:59 pm
terrorism-common-concern-says-saudi-crown-prince-in-india

தீவிரவாதத்தை வேரறுக்க இந்தியாவுக்கு எப்போதும் சவுதி அரேபியா உறுதுணையாக இருக்கும் என்று இந்தியாவுக்கு இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக வந்துள்ள சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார். 

சவுதி அரேபிய நாட்டின் இளவரசர் முகம்மது பின் சல்மான் இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக நேற்று இரவு டெல்லி வந்தார். அவருக்கு இந்திய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவரை வரவேற்றார். 

தொடர்ந்து, இன்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருடன் சவுதி இளவரசர் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். பின்னர் இந்தியா - சவுதி நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் விதமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை முடிவில் சுற்றுலா, ஒளிபரப்பு உள்ளிட்ட 5 துறைகள் சார்ந்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதன் தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சவுதி இளவரசர் இருவரும் கூட்டாக செய்தியாளருக்கு பேட்டியளித்தனர். அப்போது பிரதமர் மோடி, 'இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் விதமாக அமைந்தது. தீவிரவாதத்தை ஒழிக்க சவுதி அரசு உறுதுணையாக இருக்க உறுதி அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார். 

பின்னர் சவுதி இளவரசர் பேசுகையில், 'தீவிரவாதம் என்பது உலக அளவில் ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்து வருகிறது. பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியாவுக்கு, சவுதி அரேபியா எப்போதும் உறுதுணையாக இருக்கும். வருங்கால தலைமுறையினரின் தீவிரவாதம் இல்லாத ஒரு சமுதாயத்தில் வாழ வேண்டும். அதற்கு தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அந்த வகையில், நாங்கள் இந்தியாவுடன் கைகோர்த்து செயல்பட தயாராக இருக்கிறோம்"என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close