தென் கொரியாவுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி!

  Newstm Desk   | Last Modified : 21 Feb, 2019 05:39 am
prime-minister-narendra-modi-leaves-for-south-korea

சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் சுற்றுப்பயணமாக தென் கொரியா சென்றுள்ளார். 

இந்தியா வந்திருந்த சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் பிரதமர் நரேந்திர மோடி, இன்று பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தென் கொரியாவுக்கு மோடி புறப்பட்டார். இந்த பயணத்தில், பிரதமர் நரேந்திர மோடி தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும், தென் கொரிய தொழிலதிபர்கள், இந்திய சமூகத்தினர் உள்ளிட்ட பலரை மோடி சந்திக்கிறார். 2018ன் அமைதிக்கான சீயோல் விருது பிரதமர் மோடிக்கும் வழங்கப்படுகிறது.

இந்த பயணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில், தென்கொரியா, இந்தியாவின் மிக நெருங்கிய நண்பர் என்றும், இரு நாடுகளும் ஒரே எண்ணங்களையும், குறிக்கோளையும் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close