'அறம்’ படத்தைப் போல போர்வெல் கிணறில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன்

  Newstm Desk   | Last Modified : 21 Feb, 2019 10:07 am
in-pune-boy-rescued-from-borewell-after-16-hrs-of-operation

மகாராஷ்டிர மாநிலம், புனேவில் போர்வெல் எனப்படும் ஆழ்குழாய் கிணறில் விழுந்த 6 வயது சிறுவன், 16 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டான். தேசிய பேரிடர் மீட்புக் குழு அச்சிறுவனை வெற்றிகரமாக மீட்டது.

புனே மாவட்டம், அம்பேகான் தாலுகா பகுதியில் உள்ள தொராண்டாலே கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரது மகன் ரவி பண்டிட் பில். அச்சிறுவன் நேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது, மூடப்படாமல் இருந்த 200 அடி ஆழம் உள்ள ஆழ்குழாய் கிணறில் தவறி விழுந்தான். சிறுவனை காணவில்லை என தேடி அலைந்த பெற்றோருக்கு, அவன் ஆழ்குழாய் கிணறில் விழுந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறைக்கு தகவல் அளித்தனர். பின்னர் தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் வந்தடைந்தது.

தமிழில் வெளியான அறம் படத்தை போன்றே மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. முதலில் சிறுவனுக்கு தேவையான ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது. கயிறு கட்டி இழுக்கும் முயற்சியில் சிறுவனுக்கு காயம் ஏற்படலாம் என்பதால் அத்திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், ஆழ்குழாய் கிணறுக்கு அருகிலேயே மற்றொரு குழி தோண்டப்பட்டது. இறுதியாக சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close