விவசாயிகளுக்கு நிதியுதவி திட்டம் - 24ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

  Newstm Desk   | Last Modified : 21 Feb, 2019 10:33 am
pm-modi-to-launch-farmer-finanacial-scheme-on-coming-sunday

ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார். முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்படவுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. முன்னதாக, விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தை இடைக்கால பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, ரூ.6000 நிதியுதவி மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திட்டத்தின் மூலம் 12 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பயனாளிகளின் பட்டியலை தயாரிப்பதில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் வேகம் காட்டின. இதையடுத்து, முதல் தவணையாக ரூ.2,000 வழங்குவதற்கான திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஏப்ரல் 1ம் தேதிக்குப் பிறகு இரண்டாம் தவணை செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close