மீண்டும் மோடி தான் பிரதமர்!: கருத்துக் கணிப்பில் தகவல்

  Newstm Desk   | Last Modified : 21 Feb, 2019 04:46 pm
modi-will-again-pm-says-times-now-opinion-poll

வரும் மக்களவைத் தேர்தலையொட்டி, டைம்ஸ் குழுமம் நடத்தியுள்ள ஆன்-லைன்  கருத்துக் கணிப்பில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக, 84 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மொத்தம் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம், பிப்ரவரி 11 -ஆம் தேதி முதல் 20 -ஆம் தேதி வரை நடத்தப்பட்ட இக்கருத்துக் கணிப்பில், மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள், சாதனைகள், தோல்விகள். மெகா கூட்டணி உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

முக்கியமாக, தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்றால் யாரை பிரதமராக தேர்ந்தெடுப்பீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு 84 சதவீதம் பேர் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு அடுத்ததாக, ராகுல் காந்தி பிரதமராக 8.33 சதவீதம் பேர் மட்டுமே தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 1.4 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று, பாஜக  தலைமையிலான கடந்த 5 ஆண்டு கால மத்திய அரசின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக உள்ளது என 60 சதவீதம் பேர் கூறியுள்ளனர் .

மேலும், ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியுள்ளது தான் மத்திய பாஜக அரசின் மிகப்பெரிய சாதனை என 34 சதவீதம் பேரும், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது என 29 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் எவ்வித முன்னேற்றமும் இல்லாதது மத்திய அரசின் மிகப்பெரிய தோல்வியென 36 சதவீதம் பேரும், வேலைவாய்ப்பின்மை என 30 சதவீதத்தினரும் கருத்து கூறியுள்ளனர்.மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மத்திய அரசின் தோல்வியென 18 சதவீதம் கூறியுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close