பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் - ராஜ்நாத் சிங் உறுதி

  Newstm Desk   | Last Modified : 22 Feb, 2019 01:22 pm
we-will-take-concrete-steps-against-pakistan-hm-rajnath-singh

பாகிஸ்தானுக்கு எதிராக அரசியல் ரீதியாகவும், ராஜீய ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, முதல்முறையாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அவர் பேட்டியளித்தார். 

அப்போது, “பாகிஸ்தான் மாபெரும் தவறு செய்துவிட்டது. நாம் என்ன செய்யலாம்? இதுகுறித்து நான் ஏற்கனவே பேசியிருக்கிறேன். ராஜீய ரீதியாக, அரசியல் ரீதியாக, சட்ட ரீதியாக என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை நாங்கள் கண்டிப்பாக செய்வோம்’’ என்றார். பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, “அதை குறிப்பிட்டு சொல்ல வேண்டியதில்லை. நான் சொல்லிய பதிலிலேயே எல்லாம் இருக்கிறது. அதை நாங்கள் வேறுபடுத்தி பார்ப்பது கிடையாது’’ என்று பதில் அளித்தார். முன்னதாக, தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற தினத்தில் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களை சந்தித்தபோது, ”பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. அந்த இயக்கத்தை ஆதரிப்பது பாகிஸ்தான் அரசுதான். இந்தியா குறித்து அச்சம் எழுந்துள்ளதால் இதுபோன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு அவர்கள் உதவி வருகின்றனர். கண்டிப்பாக, இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்’’ என்றார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close