தேஜஸ் விமானத்தில் பயணம் செய்தார் பி.வி.சிந்து!

  Newstm Desk   | Last Modified : 23 Feb, 2019 04:23 pm
aero-india-2019-badminton-star-pv-sindhu-flies-aircraft-tejas-to-celebrate-women-s-day

இந்தியாவிலே தயாரிக்கப்பட்ட மிகச்சிறிய, எடை குறைந்த போர் விமானமான தேஜஸ் விமானத்தில் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து இன்று பயணித்தார். 

பெங்களூரு எலஹங்கா விமானப்படை தளத்தில் 12வது சர்வதேச விமான கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற பிப்ரவரி 25ம் தேதி வரை இந்த விமானப்படை கண்காட்சி நடைபெறவுள்ளது. 

இந்த கண்காட்சியில், இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத், தேஜஸ் விமானத்தில் விமானத்தில் முதல்முறையாக பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து பல்வேறுபிரபலங்கள் பயணம் மேற்கொண்ட நிலையில், இன்று காலை தேஜஸ் விமானத்தில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பயணம் மேற்கொண்டார். 

இந்த கண்காட்சியில் இன்று விமானத்துறையில் இன்று பெண்களின் சாதனைகளை காட்சிப்படுத்தியதை அடுத்து, பி.வி.சிந்து அதில் கலந்துகொண்டு விமானத்தில் பயணித்தார். 

தேஜஸ் போர் விமானம் எடை குறைந்த, மிகச்சிறிய போர் விமானம். ஆனால், மற்ற நாட்டின் மிகப்பெரிய போர் விமானங்களுக்கு இணையானது. எடை குறைந்ததாக இருந்தாலும், பெரிய விமானங்கள் கொண்டு செல்லும் அளவிற்கு அதிக எடை கொண்ட ஆயுதங்களை கொண்டுசெல்லக்கூடியது. எதிரி நாட்டு இலக்குகளை அழிக்கும் வல்லமை கொண்டது. 

இன்று பிற்பகல் பெங்களூரு விமான கண்காட்சியில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, கண்காட்சி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தீ விபத்தில் 200 கார்கள் எரிந்து நாசம்; பெங்களூரு விமான கண்காட்சி தற்காலிக ரத்து!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close