போர் நினைவு சின்னத்தில் அமைந்துள்ள சக்கரங்களின் சிறப்புகள்

  ஸ்ரீதர்   | Last Modified : 26 Feb, 2019 02:03 pm
national-war-memorial-is-dedicated-to-the-sacrifice-of-the-indian-soldiers-for-the-country

புதுடெல்லியில் புதுப்பிக்கப்பட்ட போர் நினைவுச் சின்னத்தை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக அற்பணித்தார்.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், முதலாம் உலகப் போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கான போர் நினைவுச் சின்னமாக டெல்லியில் கட்டப்பட்டது. இங்கு, அமர்ஜவான் ஜோதி என்ற பெயரில் 1971-ஆம் ஆண்டு முதல் அணையா ஜோதி எரிந்து கொண்டிருக்கிறது.

இதனை விரிவுபடுத்தி,  பிரமாண்ட அளவில்  போர் நினைவுச் சின்னம் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி  நாட்டு மக்களுக்காக அற்பணித்தார். இந்த பேரர் நினைவு சின்னம் அமைந்திருக்கும் பகுதியில் 4 சக்கரங்கள் உள்ள தூண் நிறுவப்பட்டுள்ளது. அதில் உள்ள ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஒரு பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

அதில் முதல் சக்கரத்தில் 1962ம் ஆண்டு நடைபெற்ற சீனா இந்தியா போர், 1947, 1965, 1971ம் ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு எதிரான போர், 1999ம் ஆண்டு இலங்கைக்கு சென்ற அமைதிப்படை போர், கார்கில் போர் ஆகியவற்றில் வீரமரணமடைந்த வீரர்களின் பெயர்கள் கிரானைட் கற்களில் தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த சக்கரத்திற்கு அமர் சக்ரா என பெயரிடப்பட்டுள்ளது.

அடுத்து உள்ள சக்கரத்தில் நமது வீரர்களின் வீரத்தை பறைசாற்றும் விதத்தில் ராணுவம், விமானப்படை, கப்பல் படையின் சாகசங்கள் புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு வீர் சக்ரா என பெயரிடப்பட்டுள்ளது.

மூன்றாவது சக்கரத்தின் முன் சுதந்திரத்திற்கு பின் பல்வேறு போர்களில் வீரமரண‌ைமந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களின் பெயர்கள் கிரானைட் கற்களில் பதிக்கப்பட்டுள்ளன. இதற்கு தியாக் சக்ரா என பெயரிடப்பட்டுள்ளது.

நான்காவது சக்கரத்திற்கு முன், நமது நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மற்ற 3 சக்கரங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ரக்ஷா சக்ரா என பெயரிடப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close