‛சர்ஜிக்கல் ஸ்டிரைக் - 2’ எதிரொலி: விமான நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு

  Newstm Desk   | Last Modified : 26 Feb, 2019 01:12 pm
high-security-alert-for-all-airports

பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகள் பயிற்சி முகாம் மீது, நம் விமானப்படை நடத்திய தாக்குதலின் எதிரொலியாக, நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

நம் நாட்டின் பல பகுதிகளிலும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் பாக்., ஆதரவு பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில், மத்திய அரசும், ராணுவமும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. 

அதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் பதுங்கியிருந்து பயிற்சி பெற்று வந்த பயங்கரவாதிகளை ஒடுக்க, இன்று அதிகாலை, அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து, பாலகோட் பகுதியில் அடர்ந்த காட்டுக்குள் இயங்கி வந்த, பயங்கரவாத முகாம்கள் மீது, நம் விமானப்படை விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. 

இந்த நடவடிக்கையில், நுாற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, நம் நாட்டில் உள்ள விமான நிலையங்களை குறி வைத்து தாக்க, பயங்கரவாதிகள் முயற்சிக்கலாம் என, உளவுத்துறை எச்சரித்துள்ளது. 

உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து, நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கத்தை விட, கூடுதல் எண்ணிக்கையிலான வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close