துல்லியத் தாக்குதல் குறித்து குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைத்தார் பிரதமர்!

  Newstm Desk   | Last Modified : 26 Feb, 2019 03:13 pm
pmmodi-brief-to-president-about-iaf-attack-on-terror-camps

இந்திய விமானப்படை இன்று அதிகாலை நடத்திய துல்லிய தாக்குதல் குறித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம், பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார்.

புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு தக்க பதிலடி தரும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள ஜெய்ஷ் - இ -முகம்மது தீவிரவாத அமைப்புகளின் முகாம்களை குறிவைத்து, இந்திய விமானப்படை இன்று அதிகாலை துல்லியத் தாக்குதல் நடத்தியது.

இத்தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் தலைவரான  மசூத் அசாரின் நெருங்கிய உறவினர் உள்பட நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதனிடையே, விமானப்படையின் துல்லியத் தாக்குதல் குறித்து, குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த்,  குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோரிடம் பிரதமர் நரேந்திர மோடி விவரித்துள்ளார்.

ஆய்வு: தீவிரவாத முகாம்கள் மீது விமானப்படை நடத்தியுள்ள தாக்குதலையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், இந்திய -பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாதுகாப்பு நிலவரம் குறித்து தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

அவருடன், இந்திய ராணுவத்தின் தலைவர் பிபின் ராவத்,  விமானப் படை தலைவர் பி.எஸ்.தனோவா ஆகியோரும் அங்கு பாதுகாப்பு நிலை தொடர்பாக ஆய்வு நடத்தியுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close