எதிரியிடம் கருணை வேண்டாம்: கவிதை வெளியிட்ட ராணுவம்

  Newstm Desk   | Last Modified : 27 Feb, 2019 10:48 am
army-tweets-poem-on-being-powerful

பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை அழித்த, நம் விமானப் படை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலும், பயங்கரவாதிகளின் அட்டூழியத்தை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற வகையிலும், ராணுவ உயர் அதிகாரி டுவிட்டரில் கவிதை பதிவிட்டுள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானில் பதுங்கியிருந்து பயிற்சி பெற்று வந்த பயங்கரவாதிகளை ஒடுக்க மத்திய அரசு திட்டமிட்டது. 

அதன் படி, இன்று அதிகாலை, 12 போர் விமானங்களில், இந்திய எல்லையை கடந்து, பாக்., எல்லைக்குள் நுழைந்த விமானப் படை வீரர்கள், அங்கிருந்த பயங்கரவாத முகாம்கள் மீது குண்டு மழை பொழிந்தனர். 

இதில், 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலியாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்நிலையில், விமானப் படையின் வீரத்தை பாராட்டியும், இந்தியாவின் பொறுமையை இனியும் சோதிக்க வேண்டாம் என்ற வகையிலுமான கவிதையை, ராணுவ உயர் அதிகாரி, தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

ராணுவ பொது தகவல்கள் பிரிவின், கூடுதல் டைரக்டர் ஜெனரல், தன் டுவிட்டர் பக்கத்தில், பிரபல ஹிந்தி கவிஞர் ராம்தாரி சிங் தினகர் எழுதிய கவிதை வரிகளை பகிர்ந்துள்ளார். 

அதன் மொழி பெயர்ப்பு இவ்வாறாக உள்ளது. ‛‛எதிரியின் முன் நீ உன் கருணை உள்ளத்தை காண்பித்தால், அவன் உன்னை வீரன் என நினைக்க மாட்டான். மஹாபாரதத்தில், சக்தி வாய்ந்த பாண்டவர்களை, அவர்களை விட வலு குறைந்த கவுரவர்கள் எவ்வாறு அடிமைத் தனமாக நடத்தினார்களோ, அப்படித்தான் உன் எதிரியும் உன்னை நடத்துவான். 

சிங்கத்திடமும் கருணை பாவனை உண்டு. ஆனால், அதே சிங்கம், அனைத்தையும் துவம்சம் செய்யும் வலிமையும் உடையது. தக்க நேரத்தில் உன் வீரத்தை வெளிப்படுத்தாவிட்டால், உன் எதிரி உன்னை பலமற்றவன் என நினைத்துவிடுவான்’’ என்பதாக அந்த கவிதை வரிகள் உள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close