தாக்குதல் குறித்து 6 நாட்டு தூதர்களிடம் இந்தியா விளக்கம்!

  Newstm Desk   | Last Modified : 26 Feb, 2019 04:21 pm
foriegn-secretary-vijay-gokhale-expalins-about-air-strike-to-foraeign-diplomats-from-usa-uk-etc

பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, துருக்கி ஆகிய 6 நாட்டு தூதர்களிடம் இந்தியா விளக்கம் அளித்துள்ளது. 

கடந்த பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில், துணை ராணுவ வாகனங்கள் மீது ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு நடத்திய தீவிரவாத தாக்குதலில், இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் 44 பேர் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை இன்று அதிகாலை பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. 

இன்று அதிகாலை 3.30 மணியளவில் குவாலியர் விமானப்படைத் தளத்தில் இருந்து 2 'மிராஜ் 2000' ரக போர் விமானங்களுடன், 1000 கிலோ எடை கொண்ட குண்டுகளுடன் சென்றது விமானப்படை. தொடர்ந்து, பால்கோட், சாகோதி, முஷாரஃபாத் ஆகிய 3 இடங்களில் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகளின் முகாம்கள் முற்றிலும் அழிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தூதர்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே விளக்கம் அளித்துள்ளார். 

newstm.in

12 போர் விமானங்கள்; 1000 கிலோ வெடிமருந்து; 21 நிமிட துல்லிய தாக்குதல்: நடந்தது எப்படி?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close