மிராஜ் போர் விமானம் 6 குண்டுகள் வீசியதாக தகவல்!

  Newstm Desk   | Last Modified : 26 Feb, 2019 04:14 pm
govt-sources-a-total-of-six-bombs-were-dropped-on-pakistan-based-terrorist-camps-by-the-indian-air-force-mirage-2000s

பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை இன்று தாக்குதல் நடத்தியதில், மிராஜ் போர் விமானம் 6 குண்டுகள் வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில், துணை ராணுவ வாகனங்கள் மீது ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு நடத்திய தீவிரவாத தாக்குதலில், இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் 44 பேர் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை இன்று அதிகாலை பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. 

இன்று அதிகாலை 3.30 மணியளவில் குவாலியர் விமானப்படைத் தளத்தில் இருந்து சென்ற 12 'மிராஜ்-2000' ரக போர் விமானங்கள் தீவிரவாத முகாம்கள் மீது சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை பொழிந்தன. இதில் 1000 கிலோ வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியான பால்கோட், சாகோதி, முஷாரஃபாத் ஆகிய இடங்களில் தீவிரவாதிகளின் முகாம்கள் முற்றிலும் அழிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே விளக்கம் அளித்தார். அதைத்தொடர்ந்து, தாக்குதல் நடத்திய தீவிரவாத முகாம்கள் மற்றும் தீவிரவாதிகளின் புகைப்படமும் வெளியானது. 

இவ்வாறு ஒவ்வொரு தகவலாக வெளியாகும் நிலையில், மிராஜ் போர் விமானம் தீவிரவாதிகள் முகாம் மீது 6 குண்டுகள் பொழிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

12 போர் விமானங்கள்; 1000 கிலோ வெடிமருந்து; 21 நிமிட துல்லிய தாக்குதல்: நடந்தது எப்படி?

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close