முப்படைத் தளபதிகளை சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி!

  Newstm Desk   | Last Modified : 26 Feb, 2019 08:23 pm
prime-minister-narendra-modi-meets-3-military-chiefs

பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில், இந்திய விமானப்படை நடத்திய அதிரடி தாக்குதலில், நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, முப்படைத் தளபதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில், 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து, இந்திய அரசு, பதிலடி தாக்குதலுக்காக கடந்த ஒரு வாரமாக திட்டமிட்டு வந்தது. இன்று அதிகாலை, பாகிஸ்தானில்  உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடங்களை குறிவைத்து, இந்திய விமானப்படை அதிரடித் தாக்குதல் நடத்தியது. முக்கியமாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பாலக்கோட் பகுதியில், குண்டுகள் வீசப்பட்டன. இந்தத் தாக்குதலில் சுமார் 300 ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தாக்குதலைத் தொடர்ந்து, எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில், பாகிஸ்தான் ராணுவத்துக்கும், இந்திய ராணுவத்துக்கும் இடையே கடும் ஷெல் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த பதட்டமான சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, முப்படை தளபதிகளை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

இதை மிஸ் பண்ணாதீங்க...

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close