அருணாச்சல பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்வு

  Newstm Desk   | Last Modified : 27 Feb, 2019 01:02 am
curfew-lifted-in-arunachal-pradesh

அருணாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த பழங்குடியினருக்கு நிரந்தர குடியிருப்பு சான்றிதழ் வழங்க அம்மாநில அரசு முடிவெடுத்ததை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

இயல்பு நிலை திரும்பி வரும் காரணத்தினாலும், அம்மாநிலத்தில் முக்கிய பண்டிகை வருவதனாலும் ஊரடங்கு உத்தரவை நீக்குவதாக தலைநகர் இடாநகரின் துணை கமிஷனர் பிரின்ஸ் தவான் தெரிவித்துள்ளார்.

"மாநிலத்தின் மிகப்பெரிய சமூகமான நியிஷி கொண்டாடும் முக்கிய நியோக்கும் யில்லோ பண்டிகை வருவதால், ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெறுகிறோம் ஏழுமலை மெதுவாக திரும்பி வருகிறது. கடந்த 48 மணி நேரங்களில் எந்த கலவர சம்பவங்களும் நடந்ததாக தகவல்கள் இல்லை" என்று அவர் கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close