காஷ்மீரில் விமானப்படையின் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: 2 விமானிகள் பலி!

  Newstm Desk   | Last Modified : 27 Feb, 2019 12:30 pm
indian-air-force-mig-jet-crashes-in-kashmir-s-budgam-2-pilots-feared-dead

காஷ்மீரின் புட்காம் பகுதியில் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 2 விமானிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நேற்று அதிகாலை 12 'மிராஜ் 2000' ரக போர் விமானங்கள், 1000 கிலோ எடை வெடிபொருட்களுடன் சென்று பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை தாக்கியது. 

இதில், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியான பால்கோட், சாகோதி, முஷாரஃபாத் ஆகிய இடங்களில் தீவிரவாதிகளின் முகாம்கள் முற்றிலும் அழிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நேற்று பாகிஸ்தானின் உளவு விமானம் ஒன்று இந்திய எல்லை குஜராத் அருகே வந்தபோது, அதனை ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். 

இதைத் தொடர்ந்து, இன்று காஷ்மீரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான பயணிகள் ஹெலிகாப்டர் ஒன்று  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இதனால், ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தொடர்ந்து தீயணைப்புப்படையினர், காவல்துறையினர் அங்கு விரைந்தனர். 

இதில், 2 விமானிகள் சம்பவ இடத்திலேயே பலியானதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close