புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தான் எல்லையில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் மீது, நம் விமானப் படை குண்டு மழை பொழிந்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், ‛நாங்களும் பதிலடி கொடுக்க தயார்’ என அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியா - பாக்., இடையே போர் நடந்தால், இரு தரப்பிலும் சேதம் ஏற்படும் என்றாலும், பாகிஸ்தானை விட, நம் நாட்டிடம் வீரர்கள், ஆயுதம், விமானங்கள் என அனைத்துமே மிக அதிகம் இருப்பதால், பாக்., ராணுவம் இந்த விவகாரத்தை சற்று பதுங்கியே கையாளும் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் வசம் உள்ள வீரர்கள், படை பலம், ஆயுதங்கள் குறித்த பட்டியல்:
இந்தியா | பாகிஸ்தான் | |
வீரர்கள் | 13.6 லட்சம் | 6.37 லட்சம் |
போர் விமானங்கள் | 2185 | 1281 |
ஹெலிகாப்டர் | 720 | 328 |
பீரங்கி டேங்குகள் | 4426 | 2182 |
போர் கப்பல்கள் | 295 | 197 |
இது தவிர, நாட்டின் பாதுகாப்பு கருதி, ராணுவத்திற்கு தேவையான நிதிக்காக, ஆண்டுக்கு, 3.2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுவே பாகிஸ்தான் அரசு, அந்நாட்டு ராணுவத்திற்காக ஆண்டுக்கு, 48 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது.
தற்போதைய நிலையில், இந்தியா - பாக்., இடையே போர் நடந்தால், அது, பாகிஸ்தானுக்கு பெருத்த அடியாக அமையும். அதே சமயம், அந்த நாட்டு ராணுவம், பயங்கரவாதிகளின் துணையை நாடவும் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
newstm.in