காஷ்மீரில் பதற்றம்: அஜித் தோவல் - ராஜ்நாத் சிங் டெல்லியில் அவசர ஆலோசனை!

  Newstm Desk   | Last Modified : 27 Feb, 2019 12:23 pm
ajit-doval-rajnath-singh-discussion-about-kashmir-situation

ஜம்மு காஷ்மீரில் பதற்ற நிலை தொடர்வதையடுத்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகிய இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

காஷ்மீர் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர். 

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நேற்று அதிகாலை 12 'மிராஜ் 2000' ரக போர் விமானங்கள், 1000 கிலோ எடை வெடிபொருட்களுடன் சென்று பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை தாக்கியது. 

இதில், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியான பால்கோட், சாகோதி, முஷாரஃபாத் ஆகிய இடங்களில் தீவிரவாதிகளின் முகாம்கள் முற்றிலும் அழிந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

ஜம்மு காஷ்மீரில் பதற்ற நிலை தொடர்வதையடுத்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகிய இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனையில் 'ரா' உளவுப்பிரிவு தலைவர் மற்றும் செயலர் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close