இவர்கள் பாகிஸ்தானியர்களை விட அபாயகரமானவர்கள்!

  பாரதி பித்தன்   | Last Modified : 27 Feb, 2019 12:37 pm
special-article-about-india-pak-war

அமெரிக்கர்கள், வாழ்நாள் முழுவதும் மறக்காத நாள், 2001, செப்டம்பர், 11 . அன்று வரை இந்தியா, இஸ்ரேல் போன்ற நாடுகள் பயங்கரவாதத்தால் சந்திக்கும் அழிவுகளை அறியாத அந்த நாடு, பயங்கரவாதத்தின், பயங்கரத்தை அணு அணுவாக அன்று அனுபவித்தது. 

நான்கு விமானங்களை அல்கொய்தா பயங்கரவாதிகள் கடத்தி, உலக வர்த்தக மையம், பென்டகன் ஆகிய இடங்களை தாக்கி அழித்தது. இதில், 19 பயங்கரவாதிகள் உட்பட 2,993 பேர் மரணம் அடைந்தனர். 

இந்த சம்பவம் நடந்ததும், நம்மைவிட அறிவு குறைவானவர்கள் அமெரிக்கர்கள் என்பதால், அரசுக்கு எதிராக பொங்கி எழவில்லை. அதிபர் தேர்தலுக்காக இந்த தாக்குதல் நடக்கிறது என்று கருத்து கூறவில்லை. 

அமெரிக்க ராணுவம், 10 ஆண்டுகள் கழித்து, அல்கொய்தா அமைப்பின் தலைவர்கள், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த போது, சுட்டு கொன்றதை, அந்த நாட்டு மக்கள் அவனை உயிரோடு பிடித்து இருக்க வேண்டும் அல்லவா என்று டிவியில் அமர்ந்து, இரண்டு விளம்பர இடைவேளைக்கு மத்தியில் விவாதிக்கவில்லை. 

இதற்கெல்லாம் காரணம், அமெரிக்கர்களுக்கு அறிவு கம்மி என்பதுடன், அந்த நாட்டின் அதிபர் மீது நம்பிக்கை அதிகம். 
நம் நாட்டில் இதெல்லாம் நடக்காது. காரணம், இங்கு அறிவஜீவிகள், அதிலும் வாய்சொல்லில் வீரர்கள் அதிகம். 

1947ம் ஆண்டு முதல் இன்று வரை, இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போருக்கான முக்கிய காரணமாக இருப்பது காஷ்மீர் தான்.  1947ம் ஆண்டு, ஜிப்ரால்டர் நடவடிக்கை என்று, 600 பாகிஸ்தானிய ராணுவத்தினர் காஷ்மீரில் ஊருவினர். அப்பபோது இழந்தோம், பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை. இன்று வரை அதன் தொல்லைகளை அனுபவதித்து வருகிறோம். 

ஒவ்வொரு முறையும், பாகிஸ்தானுடன் போர் நடக்கும் போதும், சொல்லி வைத்தது போல சமரசம் செய்ய, ஐ.நா., வந்து இறங்கும். இதில், போரில் தோல்வியடைந்த பாகிஸ்தான் லாபம் அடையும் வகையில் பேச்சுவார்த்தை முடிவடையும். இதற்கு முன் நம் நாட்டை ஆண்ட அரசுகள், இதைத் தவிர வேறுவிதமான நடவடிக்கைகளை எடுத்தது இல்லை. 

ஆனால் தற்போதைய மத்திய அரசு, பாகிஸ்தான் வாலை நறுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாகிஸ்தானுக்கு பஸ் போக்குவரத்தையும் தொடங்கி வைத்தார், கார்கில் போரையும் நடத்தி முடித்தார். 

மத்திய அரசு பக்கம் இருக்க வேண்டிய மக்கள், இதை விமர்சனம் செய்தனர். காங்கிரஸ் ஒரு படி மேலே சென்று, சவப் பெட்டி ஊழல் என்று ராணுவ அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ் மீது குற்றச்சாட்டுகளை வாசித்தது. 

பல ஆண்டுகள் கழித்து இந்த குற்றச்சாட்டு உண்மை இல்லை என்று தெரிய வந்தது. ஆனாலும், தன் மீது காங்கிரஸ் கட்சி சுமத்திய பழியை தாங்க முடியாத ஜார்ஜ்பெர்னாண்டஸ், அந்த அவமானத்தாலேயே இறந்தார். 

இது போன்ற நிலைதான் தற்போது நடந்த தாக்குதலிலும் நடந்தது. புல்வாமா தாக்குதலில் 40 பேர் பலியானதும்; பாகிஸ்தானை பழிவாங்க வேண்டாமா என்று கூக்குரல் இட்டனர்.  அதே நேரத்தில் ,இது கூட தேர்தலுக்காக நடந்த தாக்குதல் என்று விமர்சனம் செய்தார்கள்.

 26ம் தேதி அதிகாலை நடந்த தாக்குலில் போட்ட குண்டால் பற்றிய தீ கூட அணைந்து இருக்காது. தொலைக்காட்சிகளில், நம் அறிவுஜீவிகள் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கலாம். இன்னமும் கூட அமைதி காத்திருக்கலாம். 1000 கிலோ வெடி மருந்தை எப்படி கொண்டு சென்று இருக்க முடியும். காலி இடத்தில் நடந்த தாக்குதல் என்றெல்லாம் விமர்சனம்  செய்தனர்.
  
இத்தனைக்கும் ராகுல், அரவிந்த் கேஜ்ரிவால், மாயாவதி, உமர் அப்துல்லா உட்பட பாஜகவின் தீவிர எதிர்ப்பாளர்கள் கூட இந்த நடவடிக்கையை வரவேற்ற போதும் கூட, வானத்தில் இருந்து வந்து இறங்கிய எல்லாம் தெரிந்த அறிவு ஜீவிகள், இதை தேர்தலுடன் ஒப்பிட்டே பார்த்தனர். 

இந்திய அரசு விடும் அறிக்கையை நம்பாமல், பாகிஸ்தான் அரசின் மவுத் பீஸ் போலவே செயல்பட்டனர். 
பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் இவர்கள், கடந்த காலத்தில், நக்கீரன் ஆசிரியர் கோபால் காட்டிற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தி நடிகர் ராஜ்குமாரை மீட்டது போல பாகிஸ்தான் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை மன்னிப்பு கேட்க செய்து இருக்க வேண்டும். 

அல்லது வைகோ யாரிடமும் அனுமதி பெறாமல், இலங்கை சென்று பிரபாகரனை சந்தித்தது போலவே, இவர்களும் சென்று இம்ரான்கானை சந்தித்து இந்தியா, பாகிஸ்தான் இருக்க வேண்டும். இவற்றை எல்லாம் செய்யாமல், டிவியில் அமர்ந்து கொண்டு, தேசத்தை குழப்புவது, இவர்கள் பாகிஸ்தானியர்களை விட ஆபத்தானவர்கள் என்பதையே காட்டுகிறது. 

நமக்கு இருக்கும் ஒரே பயம், பாகிஸ்தான், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நாடு. பைத்தியகாரத்தனமாக அணு ஆயுதங்களை பயன்படுத்தினால், ஜப்பான் போல இந்தியாவும் மீண்டு எழ பல ஆண்டுகள் ஆகும். 

சுயநலவாத கும்பல், மக்களை சுரண்டும் அரசியல்வாதிகள் அதிகம் வசிக்கும் இந்தியாவில்,  மீட்பு நடவடிக்கை என்பதே இல்லாமல் கூட போகலாம். நாட்டின் ஒரு பகுதி, ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி போல மண்மூடிப் போகலாம். 

இது போன்ற அபாயத்தை, இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற அச்சம் உள்ளது. 
தற்போதைய தாக்குதல் போராக மாறினால், அதை முழுமையாக நடத்தி, வெள்ளைகாரன் சதியால் இரண்டு நாடாக மாறிய பாகிஸ்தான், இந்தியா மீண்டும் ஒன்றாக இணைக்க வேண்டும். 

இது, இந்த போரின் லாபமாக இருப்பது, தெற்காசிய நாடுகளில் மிகப் பெரிய வல்லரசு உருவாவதற்கு உதவும், தவறான முடிவால் இரு நாடுகளும் போர் பரணி பாட தொடங்கி விட்டது. இரு நாடுகள் இணைப்பு என்று முடிவாவது சரியாக இருக்க வேண்டும். எனினும், இது நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

newstm.in 


இந்த கட்டுரையில் இடம் பெறும் அனைத்து கருத்துக்களும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே. 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close