வருகிறது எடை குறைவான சிலிண்டர்கள்

  Newstm Desk   | Last Modified : 27 Feb, 2019 03:03 pm
hpcl-launches-new-light-weight-lpg-cylinders-for-consumers

எடை அதிகமாக இருக்கும் ஸ்டீல் சிலிண்டருக்கு மாற்றாக தற்போது லைட் வெயிட் காம்போஸிட் சமையல் எரிவாயு சிலிண்டர்களை இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. 

சமையல் எரிவாயு சிலிண்டர்களை தயாரிக்கும் நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்த மாடர்ன் சிலிண்டர்களை இன்னும் சில மாதங்களில் அறிமுகப்படுத்த இருக்கிறது. ஃபைபர் கலந்து தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த சிலிண்டர்களை கையாள்வது மற்ற சிலிண்டர்களை விட சுலபம். அதோடு நிறைய பாதுகாப்பு அம்சங்களோடும் இந்த சிலிண்டர்கள் விற்பனைக்கு வரவிருக்கின்றன.

காம்போஸிட் எல்.பி.ஜி சிலிண்டர் 2, 5 மற்றும் 10 கிலோ எடையில் கிடைக்கிறது. தற்போது இருக்கும் மெட்டல் சமையல் எரிவாயுவை, 14.2 கிலோ எடைக் கொண்டவை. இந்த வகை சிலிண்டர்கள், ஏற்கனவே சந்தையில் கிடைக்கக் கூடிய மற்ற சிலிண்டர்களைக் காட்டிலும் சற்று விலை அதிகமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த மார்டன் சிலிண்டரை பயன்படுத்த நினைப்பவர்கள் ரூ.1000 செலுத்தி, தங்களது பழைய ஸ்டீல் சிலிண்டர்களை மாற்றிக் கொள்ளலாம்.

யூ.வி பாதுகாப்போடு தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த மார்டன் சிலிண்டரில் எரிவாயு இருப்பதை அறிந்துக் கொள்ளும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் பல நிறங்களிலும் இந்த சிலிண்டர்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close