எச்சரிக்கை வாபஸ்; விமான சேவை மீண்டும் தொடக்கம்!

  Newstm Desk   | Last Modified : 27 Feb, 2019 03:22 pm
order-on-shutdown-of-airports-in-north-india-withdrawn

ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்களில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதையடுத்து, அம்மாநிலங்களில் விமான சேவை தொடரும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நேற்று அதிகாலை 12 'மிராஜ் 2000' ரக போர் விமானங்கள், 1000 கிலோ எடை வெடிபொருட்களுடன் சென்று பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை தாக்கியது. 

இதனால், இன்று பாகிஸ்தான் போர் விமானங்கள் காஷ்மீர் எல்லையில் நுழைய முயற்சி செய்து வருகிறது. பாகிஸ்தான் விமானங்கள் நுழைவதை தடுக்கும் பொருட்டு இந்திய போர் விமானங்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. இன்று காலை எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானின் எஃப் -16 விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீரின் ஜம்மு, ஸ்ரீநகர், லே, பதன்கோட் மற்றும் பஞ்சாபின் அமிர்தசரஸ், உத்ரகாண்டின் டேராடூன் ஆகிய விமான நிலையங்களில் விமான சேவை நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பொது மக்கள் நலன் கருதி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் உள்பட மேற்குறிப்பிட்ட அனைத்து விமான நிலையங்களும் விமான சேவை தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close