பாக். தாக்குதல் நடத்தியது உண்மை; விமானியை காணவில்லை - உறுதி செய்த வெளியுறவுத்துறை!

  Newstm Desk   | Last Modified : 27 Feb, 2019 04:39 pm
foreign-ministry-press-meet-about-pak-attack

இந்திய விமானப்படையின் ஒரு மிக்-21 ரக விமானத்தை இழந்துள்ளோம் மற்றும் விமானி ஒருவரை காணவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை இன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நேற்று 12 போர் விமானங்கள், 1000 கிலோ எடை வெடிபொருட்களுடன் சென்று பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை தாக்கியது. இதில், தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்தியா தகவல் தெரிவித்துள்ளது. 

இதனால், இன்று பாகிஸ்தான் போர் விமானங்கள், காஷ்மீர் எல்லையில் நுழைய முயற்சி செய்து வருகிறது. பாகிஸ்தான் விமானங்கள் நுழைவதை தடுக்கும் பொருட்டு இந்திய போர் விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு பதிலடி கொடுத்து வருகின்றன. இன்று காலை எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானின் எஃப் -16 விமானத்தை இந்திய போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. இதனால் காஷ்மீர் எல்லையில் போர் பதற்ற நிலை உருவாகியுள்ளது. 

இதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "பாகிஸ்தான் போர் விமானங்கள் இன்று இந்திய எல்லைக்குள்  நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளன. பாகிஸ்தானின் இந்த முயற்சியை இந்தியா முறியடித்தது. பாகிஸ்தானின் போர் விமானம் Mi-17 -யை இந்தியா சுட்டு வீழ்த்தியது. 

ஆனால், இதில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 விமானம் காணாமல் போயுள்ளது. மேலும் ஒரு விமானி காணாமல் போயுள்ளார். காணாமல் போன விமானி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக பாகிஸ்தான் கூறி வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது" என்று கூறினார். 

வெளியுறவுத்துறை அதிகாரி செய்தியாளர் சந்திப்பிற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, இந்திய விமானப்படையைச் சேர்ந்த அபிநந்தன் என்பவர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியானது. பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய விமானியை பிடித்து வைத்துள்ளது போன்ற புகைப்படம் மற்றும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இதனையடுத்து இந்திய வெளியுறவுத்துறையும் விமானி காணாமல் போயுள்ளது குறித்து தற்போது தகவல் வெளியிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close