அபிநந்தன் குறித்த வீடியோக்களை நீக்க உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 28 Feb, 2019 05:24 pm
remove-the-videos-of-abhinandan-center-orders-to-youtube

பாக்., ராணுவத்திடம் சிக்கிய, நம் விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் குறித்த வீடியோ பதிவுகளை, உடனடியாக நீக்கும் படி, யூடியூப் நிறுவனத்திற்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்தியா - பாக்., இடையே ஏற்பட்ட பதற்றமான சூழலின் போது, இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற, பாக்., விமானங்களை விரட்டியடித்த போது, எதிர்பாராத விதமாக, நம் விமானப்படையை சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன், பாக்., ராணுவத்திடம் சிக்கினார்.

அங்கிருந்த சிலர், அவரை கடுமையாக தாக்கிய வீடியோ காட்சிகளும், அவரை அந்நாட்டு ராணுவம் மீட்டுச் சென்று, தேனீர் வழங்கி காட்சிகளும், சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், ஜெனிவா ஒப்பந்தத்தை மீறி, பாக்., இந்த வீடியோ காட்சிகளை வெளியிட்டதாக, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன், அபிநந்தன் குறித்த வீடியோக்களை உடனடியாக நீக்கும் படி, யூடியூப் நிறுவனத்திற்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close