வாகாவில் கொடியிறக்க நிகழ்ச்சி ரத்து?

  Newstm Desk   | Last Modified : 01 Mar, 2019 05:08 pm
ahead-of-iaf-pilot-abhinandan-varthaman-s-return-attari-wagah-retreat-ceremony-cancelled

நம் விமானப்படையை சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன், பாக்., ராணுவத்திடமிருந்து நம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவதை ஒட்டி, வாகா எல்லையில், வழக்கமாக நடக்கும் கொடியிறக்க நிகழ்ச்சி இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாக்., போர் விமானங்களை விரட்டி சென்ற போது, அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கிய, நம் விமானப்படையை சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன், இன்று, மீண்டும் நம் நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறார். 

இந்த நிகழ்வு, இந்தியா - பாக்., எல்லையில் அமைந்துள்ள, பஞ்சாப் மாநிலம் வாகாவில் நடக்கிறது. அபிநந்தனை வரேவற்க ஆயிரக்கணக்கானோர் வாகாவில் கூடியுள்ளனர். 

இதனால், வாகாவில் வழக்கமாக நடைபெறும் கொடியிறக்க நிகழ்ச்சி, இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close