பிரதமரின் மன் கி பாத் புத்தகத்தை வெளியிட்டார் அருண் ஜேட்லி !

  டேவிட்   | Last Modified : 02 Mar, 2019 08:22 pm
mann-ki-baat-book-released-by-arun-jaitley

பிரதமர் நரேந்திர மோடியின் ’மன் கி பாத்’ வானொலி உரைகளின் தொகுப்பு புத்தகத்தை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று வெளியிட்டார். 

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி மூலம், நாட்டில் நடைபெற்றுவரும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து பிரதமர் மோடி தனது கருத்தை பதிவுசெய்து வருகிறார்.

இந்நிலையில், ’மன் கி பாத்’ நிகழ்ச்சியின் மூலம் ஆற்றிய 50 வானொலி உரைகளின் தொகுப்பு அடங்கிய புத்தகத்தை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அருண் ஜேட்லி, இந்திய விடுதலை போராட்டத்தின்போது மக்களை நேரடியாக சென்றடைய மகாத்மா காந்தி, வானொலி நிகழ்ச்சிகளையே அதிகமாக பயன்படுத்தியதாக குறிப்பிட்டார். அதேபோல், அரசின் தகவல் தொடர்பு சாதனமாக வானொலியின் மன் கி பாத் நிகழ்ச்சியை பிரதமர் மோடி பயன்படுத்திக் கொண்டதாக பேசினார்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close