தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்தார் கனிமொழி!

  Newstm Desk   | Last Modified : 04 Mar, 2019 01:23 pm
dmk-kanimozhi-gives-application-for-parliament-elections

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் பொருட்டு, திமுக எம்.பி கனிமொழி இன்று அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு அளித்தார். 

திமுக மகளிர் அணிச் செயலர் மற்றும் ராஜ்யசபா எம்.பியாக இருக்கும் கனிமொழி, முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று விருப்பமனு அளித்துள்ளார். 

ராஜ்யசபா எம்.பிக்கள் ஒரு கிராமத்தை தத்தெடுக்கும் திட்டப்படி, கனிமொழி தேர்ந்தெடுத்த கிராமம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. இதனால் அவர் கடந்த ஒரு வருட காலமாக தூத்துக்குடிக்கு அடிக்கடி சென்று வருகிறார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இதனால் அவர் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

அதன்படியே இன்று அவர், நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துகுடி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார். தூத்துக்குடி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளதால் அவருக்கு திமுக சார்பில் தூத்துக்குடி தான் ஒதுக்கப்படும் என்று பேச்சு அடிபடுகிறது.  மேலும் வருகிற ஜூலை மாதத்துடன் கனிமொழியின் பதவிக்காலம் முடிவடைகிறது. 

விருப்பமனு அளித்த பின், செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, "நான் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக  கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு கட்டுப்படுவேன். எந்த தொகுதியில் தளபதி போட்டியிட சொல்கிறாரோ அந்த தொகுதியில் போட்டியிடுவேன்" என்று தெரிவித்தார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close