'ஒரே நாடு; ஒரே அட்டை' திட்டம்: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

  Newstm Desk   | Last Modified : 04 Mar, 2019 04:46 pm
pm-modi-to-launch-one-nation-one-card-for-all-modes-of-travel-today

போக்குவரத்துத்துறையை மின்னணு முறை ஆக்கும் பொருட்டு, நாடு முழுவதும்  'ஒரே நாடு; ஒரே அட்டை' என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று அகமதாபாத்தில் தொடங்கி வைக்கிறார். 

நாடு முழுவதும் போக்குவரத்து துறையினை மின்னணு முறையாக்கும் பொருட்டு, பிரதமர் மோடி புதிய திட்டம் ஒன்றை கொண்டு வருகிறார். அதாவது, இந்தியா முழுவதும் உள்ள மக்கள், ரயில், பேருந்து உள்ளிட்டவற்றில் பயணம் செய்ய ஒரே அட்டையை உபயோகப்படுத்த முடியும். மெட்ரோ ரயில் கட்டணம், ரயில் நடைபாதை கட்டணம் என அனைத்தும் இதில் அடங்கும். அதுமட்டுமின்றி சுங்கக்கட்டணத்தையும் இந்த அட்டை மூலமாக செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

'ஒரே நாடு; ஒரே அட்டை' என்ற இந்த புதிய மின்னணு முறை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று அகமதாபாத்தில் நடைபெறும் விழாவில் தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி கலந்துகொள்ளும் விழா சற்றுமுன் தொடங்கியுள்ளது. 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close