இந்தியா - பாகிஸ்தான் பதற்றத்தால் தடைபட்ட திருமணம்

  Newstm Desk   | Last Modified : 05 Mar, 2019 12:52 pm
marriage-called-off-in-rajasthan-due-to-india-pakistan-tension

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மணமகனுக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த மணமகளுக்கும் நடைபெறவிருந்த திருமணம் தடைபட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மஹேந்திர சிங். இவருக்கு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள சினோய் கிராமத்தைச் சேர்ந்த ஜகன் கன்வாருடன் மார்ச் 8ம் தேதி திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டதால் மஹேந்திர சிங்கிற்கு சிக்கல் உருவானது. முதலில் பாகிஸ்தான் செல்வதற்கான விசா கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. பின்னர் அமைச்சர் ஒருவரின் உதவி காரணமாக, மஹேந்திர சிங் உள்பட 5 பேருக்கு மட்டுமே விசா கிடைத்தது. 

இதற்கிடையே, உறவினர்கள் அனைவருக்கும் திருமண அழைப்பிதழ்களை மஹேந்திர சிங் வழங்கிவிட்டார். அதே சமயம், அவர்கள் பயணிப்பதாக திட்டமிடப்பட்டிருந்த தார் எக்ஸ்பிரஸ் ரயிலை பாகிஸ்தான் நிறுத்திவிட்டது. இவ்வாறு ஏகப்பட்ட குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில், மஹேந்திர சிங் தனது திருமணத்தை ரத்து செய்துள்ளார். உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேறொரு தினத்தில் திருமணத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனத் தெரிகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close