ஜம்மு பேருந்து நிலையத்தில் குண்டுவெடிப்பு!

  Newstm Desk   | Last Modified : 07 Mar, 2019 12:55 pm
blast-at-jammu-bus-stand-injured-rushed-to-hospital

ஜம்மு பேருந்து நிலையத்தில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஜம்மு - காஷ்மீர் மாநிலத் தலைநகரான ஜம்முவில் பேருந்து நிலையத்தில் இன்று காலை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் பொதுமக்கள் 5 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 

குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த இடம் முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

ஜம்மு -காஷ்மீரில், இந்தியா -பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதிகளில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் அப்பகுதி மக்களிடையே மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close