காஷ்மீரிகள் மீது லக்னோவில் தாக்குதல்; ஒருவர் கைது!

  Newstm Desk   | Last Modified : 07 Mar, 2019 04:12 pm
kashmiri-vendors-thrashed-in-lucknow-one-arrested

லக்னோவில் டலிகஞ் பகுதியில் உள்ள ஒரு பாலத்தில் வியாபாரம் செய்து கொண்டிருந்த காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த இரண்டு சாலையோர வணிகர்களை சுற்றி வளைத்து, சிலர் பிரம்பால் அடித்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த சில சிறு வணிகர்கள், உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள டலிகஞ் பகுதியில் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் அவர்களை சுற்றி வளைத்து, அவர்களை பற்றி விசாரித்தனர்.

காஷ்மீரிகள் என தெரிந்தவுடன், அவர்களது அடையாள அட்டையை அந்த கும்பல் கேட்க, அவரும் அதை காட்டுகிறார். இருப்பினும், அந்த கும்பலை சேர்ந்த சிலர், வணிகர்களை பிரம்பால் கடுமையாக தாக்கினர். பாலத்தில் சென்றுகொண்டிருந்த பலர் இதை கண்டுகொள்ளாமல் சென்றனர். ஒரே ஒருவர் மட்டும் காஷ்மீரிகளுக்கு ஆதரவாக வந்து பேசினார். 

இந்த சம்பவத்தை பற்றி சிலர் போலீசுக்கு தெரியப்படுத்த, போலீசார் அங்கு விரைந்தனர். இரண்டு வணிகர்கள் போலீஸ் வருவதற்குள் அங்கிருந்து சென்றுவிட்டதாக தெரிகிறது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக, போலீசார் அவரை விடுவித்து, பின்னர் தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இது தொடர்பாக, விஷ்வ இந்து டால் என்ற அமைப்பை சேர்ந்த பஜ்ரங் சோன்கார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close