பார்வையில்லாதவர்களுக்காக புதிய ரூ.20 நாணயம்; பிரதமர் வெளியீடு

  Newstm Desk   | Last Modified : 07 Mar, 2019 04:42 pm
pm-modi-unveils-new-rs-20-coins-for-blind-people

பிரதமர் நரேந்திர மோடி, இன்று டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், பார்வையில்லாதோர் எளிதாக பயன்படுத்துமாறு, புதிய ரூ.20 நாணயம் மற்றும், ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 ஆகிய நாணயங்களையும் அறிமுகப்படுத்தினார்.

ரூபாய் நாணயங்களை பார்வையற்றோரும் எளிதாக கண்டறிந்து பயன்படுத்தும் நோக்கத்தோடு, பிரதமர் நரேந்தர மோடி, இன்று புதிய ரூ.20 நாணயத்தை அறிமுகப்படுத்தினார். மேலும், ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 ஆகிய நாணயங்களும்,  பார்வையற்றோரு பயன்படுத்துமாறு புதிய வகையில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். புதிய நாணயங்களை, ரிசர்வ் வங்கி கூடிய விரைவில் புழக்கத்திற்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிய 20 ரூபாய் நாணயம், 12 முனைகள் கொண்டவாறு பலகோணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு, பார்வையில்லாதோர் எளிதாக அடையாளம் காணுமாறு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.20 தவிர, மற்ற நாணயங்கள் அனைத்துமே வட்டமாக, விலைக்கேற்றவாறு, வடிவம் மற்றும் எடை அதிகரிப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது.

"வெவ்வேறு வடிவங்களில் உள்ள இந்த புதிய நாணயங்கள், பார்வையில்லாதோர் எளிதாக அடையாளம் காணுமாறும், அவர்களுக்கு உதவுமாறும், அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்குமாறும் உருவாக்கப்பட்டுள்ளது" என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close