50 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்: மத்திய அமைச்சரவை

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 12:04 pm
cabinet-clears-50-new-kendriya-vidyalaya-schools

மத்திய அமைச்சரவை கூட்டத்தில், புதிதாக 50 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை துவக்க உள்ளதாகவும், அவை, பொது/ பாதுகாப்புத் துறை செயல்படும் பகுதிகளில் அமைக்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், புதிதாக 50 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் துவக்க முடிவெடுக்கப்பட்டது. இவை மூலம் 50,000 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த 50 புதிய கே.வி பள்ளிகளும், பொது/ பாதுகாப்புத்துறை பகுதிகளில் அமைக்கப்படும் என்று அமைச்சர் ஜெட்லி கூறினார். தற்போது நாடு முழுவதும் 1,196 மற்றும் வெளிநாடுகளில் 3 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

புதிய பள்ளிகள் உ.பி, உத்தரகாண்ட், தமிழகம், ஆந்திரா, பீகார், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஹிமாச்சல், அசாம், ஹரியானா, ஒடிஷா, கேரளா, ஜம்மு காஷ்மீர், சட்டிஸ்கர், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமைக்கப்படவுள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close