விமானி, பணியாட்கள் எல்லாமே பெண்கள் தான்... மகளிர் தினத்தில் அசத்தும் ஏர் -இந்தியா!

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 08:14 am
woman-s-day-air-india-operate-flights-with-all-woman-crew

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ஏர் -இந்தியா நிறுவனம் தமது 12 சர்வதேச விமானங்கள் மற்றும் 40 -க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்களை முற்றிலும் பெண்களை கொண்டு இன்று இயக்குகிறது.

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக ஏர் -இந்தியா நிறுவனம், தமது 12 சர்வதேச விமானங்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்களில் விமானிகள், பணியாட்கள், மருத்துவர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் என அனைத்து பிரிவிலும் பெண்களையே நியமித்து இன்று விமானங்களை இயக்குகிறது.

டெல்லியிலிருந்து லண்டன், பாரிஸ், நியூயார்க், சிட்டி, சிகாகோ, ரோம் உள்ளிட்ட உலகின் பல்வேறு பிரபல இடங்களுக்கு இன்று பயணிக்கும் ஏ ர்-இந்தியா விமானங்களை முற்றிலும் பெண் விமானிகளே இயக்குகின்றனர்.

விமானப் போக்குவரத்துத் துறையில் பெண்களின் பங்களிப்பை உலகறிய செய்யும் விதமாகவும், பெண்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஏர்-இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் அஸ்வனி லோஹனி தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close