அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் - இந்தியா, ரஷியா இடையே ஒப்பந்தம்

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 10:38 am
india-russia-signed-the-deal-for-nuclear-power-sub-marine

அணு ஆயுதத் தாக்குதலை நடத்தும் வல்லமை கொண்ட நீர் மூழ்கிப் கப்பலை, ரஷியாவிடம் இருந்து இந்தியாவுக்கு 10 ஆண்டு காலத்துக்கு குத்தகைக்கு பெறும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதற்காக, ரஷியாவுக்கு ரூ.20,000 கோடியை இந்தியா கட்டணமாக செலுத்த வேண்டும்.

இதுகுறித்து இந்திய பாதுகாப்புத்துறை சார்பில் அதிகாரப்பூர்வ செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், இரு நாட்டு அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதை தகவல்கள் உறுதி செய்துள்ளன. ரஷியாவிடம் இருந்து இந்தியா குத்தகைக்கு பெறும் மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பல் இதுவாகும்.

முன்னதாக, ஐ.என்.எஸ். சக்ரா என்ற நீர்மூழ்கிக் கப்பல் கடந்த 1988ம் ஆண்டில் குத்தகைக்கு பெறப்பட்டது. அதன் செல்லுபடிக் காலம் 3 ஆண்டுகள் ஆகும். அதன் பிறகு, இரண்டாவது ஐ.என்.எஸ். சகரா நீர்மூழ்கிக் கப்பலை 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெறும் ஒப்பந்தம் கடந்த 2012ம் ஆண்டில் கையெழுத்தானது. இந்நிலையில், மூன்றாம் முறையாக செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, அகுலா என்ற அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பலை இந்திய கடற்படையிடம் 2025ம் ஆண்டில் ரஷியா சமர்ப்பிக்கவுள்ளது. அதை 10 ஆண்டுகாலம் இந்தியா பயன்படுத்திக் கொள்ளும்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close