இந்தியாவிலே முதல் முறையாக பப்ஜி கேமிற்கு தடை! - எங்கு தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 12:43 pm
pubg-mobile-game-banned-in-surat

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் நாளை முதல் பப்ஜி கேம் விளையாட அம்மாநில காவல்துறை தடை விதித்துள்ளது. காவல்துறையின் இந்த நடவடிக்கை அப்பகுதி பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

'பிளேயர்ஸ் அன்நோன் பேட்டில்கிரவுண்ட்' (Player Unknown's Battlegrounds) என்பதன் சுருக்கம் தான் 'பப்ஜி'(PUBG). தற்போது இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடையே பிரபலமாக இருக்கும் ஒரு ட்ரெண்டிங் கேம் என்று கூறலாம். லேப்டாப்பில் மட்டுமில்லாமல் மொபைலிலும் விளையாடும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த கேமினால் இளைஞர்கள், குழந்தைகளிடம் வன்முறை தூண்டப்படுகிறது என்ற ஒரு குற்றச்சாட்டு பல்வேறு தரப்புகளிடம் இருந்து ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளது. உயிரை குடிக்கும் ப்ளூவேல் விளையாட்டை தடை செய்தது போல், பப்ஜி விளையாட்டையும் தடை செய்ய வேண்டும் என பல பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் இந்த கேமினால் பல்வேறு இடங்களில் அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

இந்த நிலையில், இந்தியாவிலே முதல் முறையாக ஒரு நகரில் பப்ஜி கேமிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது. அந்த நகரம் குஜராத் மாநிலத்திலுள்ள சூரத் தான்..

சூரத் நகர காவல் ஆணையரிடம் பப்ஜி தொடர்பான புகார்கள் தொடர்ந்து வரவே, அவர் இந்த கேமிற்கு தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இது அந்நகர பெற்றோர்கள் மத்தியில் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close