பெண்களும் நாட்டுக்காக போரிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது - பிரதமர் பெருமிதம்

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 12:24 pm
we-had-given-oppurtunity-for-girls-to-fight-for-india-pm-modi

ஆண்களைப் போலவே பெண்களும் நாட்டுக்காக போரிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். 


சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது தொகுதியான வாரணாசியில், பெண்கள் முன்னிலையில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது, “நமது வீரர்கள் துணிச்சலை வெளிக்காட்டியபோது, ஆண்கள் பெருமை கொண்டதோடு மட்டுமல்லாமல், தங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டால் இதைச் செய்ய முடியும் என்று பெண்களும் கருதினர். இந்நிலையில், ஆயுதப் படைகளின் சில பிரிவுகளில் பெண்களுக்கான நிரந்தர படைப்பிரிவை உருவாக்குவது என்று அண்மையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலக்குகளை வீரர்கள் அழித்தபோது, இதுபோன்று சாதிக்க வேண்டும் என்று நமது மகள்களும் விரும்பினர். இன்றைக்கு நம் நாட்டின் மகள்கள் போர் விமானங்களில் பறக்க முடியும். உலகை வலம் வர முடியும்’’ என்றார் அவர்.

முன்னதாக, மகளிர் தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். காசி விஸ்வநாதர் கோயிலில் அவர் வழிபாடு நடத்தினார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close