காங்கிரஸை தொடர்ந்து தேர்தல் கோதாவில் குதித்துள்ள கட்சி!

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 12:48 pm
up-first-phase-candidate-list-released-by-sp

உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸை தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சியும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. எனவே, தேர்தலில் இங்கு வெற்றி பெற்று அதிகபட்ச இடங்களை கைப்பற்ற வேண்டுமென்பது எல்லா அரசியல் கட்சிகளின் முக்கிய நோக்கமாக உள்ளது.

வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், உத்தரப் பிரதேசத்தில் பிரதான மாநிலக் கட்சிகளாக உள்ள சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இதில் சமாஜ்வாதி கட்சி மொத்தம் 37 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில், ஆறு பேரை கொண்ட, முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

இதில், கட்சியின் நிறுவனத் தலைவரும், அகிலேஷ் யாதவின் தலைவருமான முலாயம் சிங் யாதவ் மெயின்புரி தொகுதியில் வேட்பாளராக களம் இறங்க உள்ளார்.

மேலும், இவரின் நெருங்கிய உறவினரான தர்மேந்திர யாதவ் பாதஉன் தொகுதியிலும், கட்சியின் மூத்த தலைவரான ராம் கோபால் யாதவின் மகன் அக்ஷய் யாதவ் ஃப்ரோசாபாத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close