அயோத்தி வழக்கின் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டது குறித்து ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் கருத்து என்ன?

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 02:15 pm
ayodhya-case-mediator-sri-sri-ravi-shankar-tweet-about-sc-order

அயோத்தி வழக்கில் சமரசத் தீர்வை ஏற்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள, ஓய்வுபெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்தர் குழுவில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும் இடம்பெற்றுள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்றுள்ள அவர், சமூக நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

இதுகுறித்து, டுவிட்டரில் கருத்து கூறியுள்ள ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், “அனைவருக்கும் மதிப்பளித்து, கனவுகளை நனவாக்கி, நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்னைகளை மகிழ்ச்சியோடு முடிவுக்கு கொண்டு வர வேண்டும். சமூகத்தில் நல்லிணக்கத்தை தொடர வேண்டும். இந்த இலக்குகளை நோக்கி நாம் நகர வேண்டு’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த புதன்கிழமை இந்த விவகாரம் குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “அயோத்தி வழக்கில் மத்தியஸ்தம் செய்வது என உச்சநீதிமன்றம் முடிவு செய்திருப்பது, நாட்டு நலனுக்கான நல்ல முடிவாகும். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இது பொருந்தும். கொந்தளிப்பான இந்தப் பிரச்னைக்கு சுமூகமான தீர்வு ஏற்படுத்துவதற்கான எந்தவொரு வாய்ப்பையும் நாம் தவறவிடக் கூடாது. நமது கருத்து வேறுபாடுகளையும், பிடிவாதத்தையும் தள்ளிவைத்துவிட்டு, சம்பந்தப்பட்ட சமூகங்களின் உணர்வுகளை உள்வாங்கவும், கௌரவப்படுத்தவும் முயற்சிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close