புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1.01 கோடி நிதியுதவி !

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 03:44 pm
rs-1-01-crore-has-been-paid-to-40-crpf-s-families

புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1.01 கோடி வழங்கப்படும் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதியில் இருந்து தலா ரூ.35 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

கடந்த பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படை வாகனம் மீது ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். நாடு முழுவதுமுள்ள தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் வீரர்களுக்காக தங்களது இரங்கலை தெரிவித்தனர். 

எல்லையை காக்கும் ராணுவ வீரர்கள் உயிரிழந்தால் மத்திய அரசு, சிஆர்பிஎப் சார்பில், வீரர்களின் குடுமபத்தினருக்கு இழப்பீடுத் தொகை வழங்கப்படும். அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப இந்த தொகையில் மாற்றம் இருக்கும். 

அதன்படி, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களுக்கு எவ்வளவு தொகை கொடுக்கப்படும் என்ற அறிக்கை வெளியாகியுள்ளது.  அதன்படி, மத்திய அரசின் நிதியில் இருந்து ரூ.35 லட்சம், ஆபத்து கால பணிகளுக்காக ரூ.21.5 லட்சம், காப்பீடு ரூ.30 லட்சம், வீர தீர செயல்களுக்கு ரூ. 15 லட்சம் என மொத்தமாக ரூ.1.01 கோடி வழங்கப்படுகிறது என அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இது தவிர, மாநில அரசுகள், அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த வீரர்களுக்கு நிதியுதவி அளிக்கிறது. வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை, பல்வேறு பொதுநல அமைப்புகளின் நிதியுதவி, அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் உதவியும் வீரர்களின் குடும்பத்தினருக்கு கிடைக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close