இந்துக்களை எலிகள் போல பயன்படுத்தாதீர்கள்: அமைச்சர் உமா பாரதி

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 06:44 pm
don-t-treat-hindus-like-guinea-pigs-uma-bharti

அயோத்தியில் சமரச பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்த குழுவை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ள நிலையில், ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் எலிகளை போல இந்துக்களை பயன்படுத்தக் கூடாது, என மத்திய அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.  

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இதில், இரண்டு தரப்புக்கும் இடையே மத்தியஸ்தம் செய்து வைக்க உச்ச நீதிமன்றம் 3 பேர் கொண்ட குழுவை நிர்ணயித்து இன்று தீர்ப்பளித்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு குறித்து பேசிய மத்திய அமைச்சர் உமா பாரதி, "இந்த தீர்ப்பு எனக்கு வருத்தமளிக்கிறது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் மீதுள்ள மதிப்பால், என்னால் வேறெதுவும் கூற முடியவில்லை" என்றார். 

மேலும், "சோம்நாத்தில் பெரிய கோவில் கட்டுவதற்கு தேசிய அளவில் ஒருமித்த குரல் எழுந்தது. அதேபோல, அயோத்தியில் பல இடங்களில் மசூதிகள் உள்ளன. ஃபைசாபாத்திலும் மற்ற இடங்களிலும் மசூதிகள் உள்ளன. இந்துக்களை மட்டும், ஆய்வகத்தில் பயன்படுத்தப்படும் எலிகளை போல பயன்படுத்தக் கூடாது" என்று கூறினார். 

ராமர் பிறந்த இடமாக இந்துக்கள் பார்க்கும் அயோத்தியில், வேறு எதையுமே காட்டும் பேச்சுக்கள் கூட எழக்கூடாது, என்றும் அவர் கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close