கெட்டப் சேஞ்ச் - தாடி, மீசையுடன் லண்டனில் சுற்றும் நீரவ் மோடி!

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 10:28 am
nirav-modi-spotted-in-london-said-no-comments-to-questions

இந்தியாவில் வங்கிக் கடன் மோசடி வழக்கில் தேடப்படும் நபரான நீரவ் மோடி, தனது முக அடையாளங்களை மாற்றிக் கொண்டு லண்டனில் சுதந்திரமாக உலா வருகிறார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி, முறைகேடான வழிமுறைகளை பின்பற்றி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் பெற்றார். அதே சமயம், அந்தக் கடனையும் திருப்பிச் செலுத்தவில்லை. இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு அஞ்சி அவர் வெளிநாட்டுக்கு தப்பியோடினார். இதையடுத்து, நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வரும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.


இந்தியாவில் நீரவ் மோடிக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கி, அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அவர் தங்கள் நாட்டில் இருப்பதாக பிரிட்டன் அரசு கடந்த ஆண்டு டிசம்பரில் தெரிவித்திருந்தது. இத்தகைய சூழலில், லண்டன் வீதிகளில் நீரவ் மோடி சுதந்திரமாக உலா வரும் காட்சி வெளியாகியுள்ளது. இந்தியாவில், இருக்கும்போது மீசை, தாடி இல்லாமல் இருந்தார் அவர். தற்போது முறுக்கு மீசை, தாடியுடன் தனது அடையாளங்களை முழுவதுமாக மாற்றிக் கொண்டு விட்டார்.

பிரிட்டனைச் சேர்ந்த “தி டெலிகிராப்’’ நாளிதழின் செய்தியாளர், நீரவ் மோடியின் அடையாளத்தை கண்டுகொண்டார். அவர், “பிரிட்டனில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளீர்களா, இந்தியாவுக்கு திரும்பும் திட்டம் உள்ளதா, பிரிட்டனில் எவ்வளவு காலம் இருப்பீர்கள்’’ என்ற கேள்விகளை நீரவ் மோடியிடம் முன்வைத்தார். அதற்கு “மன்னிக்கவும், பதில் இல்லை’’ என்கிறார் நீரவ் மோடி. 
https://twitter.com/Telegraph/status/1104110432376291328


இந்தியாவில் பல கோடி ரூபாய் சொத்துகளுக்கு அதிபதியான நீரவ் மோடி, தற்போது லண்டனிலும் வைர வியாபரத்தை சிறிய அளவில் தொடருவதாகவும், அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.15 லட்சம் வாடகையில் 3BHK வீட்டில் வசிப்பதாகவும் தெரியவந்துள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close