சொன்னா மட்டும் பத்தாது; செய்யனும் - பாகிஸ்தானுக்கு இந்தியா அட்வைஸ்

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 12:49 pm
pakistan-should-act-against-terrorism-indian-external-affairs-ministry

‘புதிய பாகிஸ்தான்; புதிய சிந்தனை’ என்று சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. தீவிரவாதத்துக்கு எதிராக புதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசை இந்தியா வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தான் மண்ணில் எந்தவொரு தீவிரவாத இயக்கத்தையும் அனுமதிக்க மாட்டோம். இது புதிய பாகிஸ்தான் என்று அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் நேற்று கூறியிருந்தார். இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார், டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

புல்வாமா தீவ்விரவாதத் தாக்குதலுக்கு, ஜெய்ஷ் -ஏ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகும், பாகிஸ்தான் அரசு அதை மறுத்து வருவது வருந்தத்தக்கது. ஜெய்ஷ் இயக்கம் தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறி வருகிறார். ஜெய்ஷ் இயக்கத்தை பாகிஸ்தான் அரசு ஆதரிக்கிறதோ என்ற கேள்வி எழுகிறது. பாகிஸ்தானில் ஜெய்ஷ் இயக்க பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருவது, அந்த இயக்கத் தலைவர் மசூத் அஸார் அந்நாட்டில் தங்கியிருப்பது ஆகியவை குறித்து, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் தெரியும். ஐ.நா.வால் தடை செய்ய தீவிரவாதியாக மசூத் அஸாரை அறிவிக்க வேண்டும் என அனைத்து நாடுகளையும் கேட்டுக் கொள்கிறோம். புதிய பாகிஸ்தான், புதிய சிந்தனை என்று சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. தீவிரவாதத்துக்கு எதிராகவும், எல்லை தாண்டிய தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் புதிய நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close