இந்திய எல்லையில் வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோன்!

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 03:39 pm
pakistan-drone-shot-down-by-iaf

பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த உளவு விமானம், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றபோது, இந்திய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. பாலகோட் தாக்குதலுக்கு பின் இந்திய எல்லையில் வீழ்த்தப்பட்டுள்ள 3வது பாகிஸ்தான் டிரோன் இதுவாகும். 

புல்வாமா தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் எடுத்து வருவதாக தெரிகிறது. பாலகோட் தாக்குதலுக்கு பின்னர், இரண்டு முறை பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த டிரோன்கள், இந்திய எல்லைக்குள் சுட்டு வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், இன்று பாகிஸ்தானை சேர்ந்த மற்றொரு டிரோன் ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் பகுதியில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்தது. அப்போது இந்திய விமானப்படை, அந்த டிரோனை சுட்டு வீழ்த்தியது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close