பாதுகாப்புத் துறையில் புதிய 'தகவல் போர்' பிரிவு

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 04:49 pm
defence-ministry-creates-information-warfare-branch

சமூக வலைத்தளங்களில் போலி செய்திகள் மற்றும் அந்நிய நாடுகளின் பொய் பிரச்சாரங்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம், புதிதாக 'தகவல் போர்' பிரிவு ஒன்றை உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளது. 

சர்வதேச அளவில், சமூக வலைத்தளங்களின் தாக்கம் அதிகரிப்பதை போல, அதன்மூலம் பரப்பப்படும் போலி செய்திகளும் பொய் பிரச்சாரங்களும் அதிகரித்து வருகின்றன. அமெரிக்க தேர்தல் உட்பட பல நாடுகளில் இதனால் பெரும் சர்ச்சைகள் எழும்பியது குறிப்பிடத்தக்கது. இதை எதிர்த்து போரிட ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. 

இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை நடத்திய பாலகோட் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் அரசு பல்வேறு பொய் பிரச்சாரங்களில் ஈடுப்பட்டது. இந்தியா விங் கமேண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் கைது செய்தபோது, அவரது வீடியோக்களும் வெளியிடப்பட்டன. பாகிஸ்தான் ராணுவமும், உளவுத்துறையும் தொடர்ந்து பல்வேறு பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதற்கு பதிலடியாக, இந்திய அரசு அடுத்தகட்ட நடவடிக்கையை எடுத்துள்ளது. 

இதற்காக புதிய 'தகவல் போர்' பிரிவை உருவாக்க இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 3 வாரங்களில், எதிர்நாட்டு ஊடகங்களின் பொய் பிரச்சாரங்கள் அதிகரித்துள்ளது. அனைத்து தரப்புக்கும் இது பற்றி எச்சரிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்கொள்ள ராணுவம் விழிப்பாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வருங்கால தகவல் போர்க்களத்தை மனதில் கொண்டு, தகவல் போருக்காக புதிய இயக்குனர் ஜெனரலும்(DG), அவருக்கு கீழ் பொதுத்துறை தகவல் மற்றும் தகவல் போர் என இரண்டு ஏ.டி.ஜி-க்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close